Saturday 4th of May 2024 06:12:02 AM GMT

LANGUAGE - TAMIL
கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டனர் ஜேர்மன் அதிகாரிகள்!

கண்ணிவெடி அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டனர் ஜேர்மன் அதிகாரிகள்!


கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, அரசர்கேணிப்பகுதியில் ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் டாஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை இலங்கைக்கான ஜேர்மன் தூதரக அதிகாரி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

இன்று பகல் 11.30 மணிக்கு குறித்த பகுதிக்குச் சென்ற குழுவினர், கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களைச் சந்தித்ததுடன், பணி நிலமைகள் தொடர்பிலும் வெடிபொருட்களை அகற்றும் பணிகளின் போது எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

ஜேர்மன் நாட்டின் நிதியுதவியுடன் குறித்த பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள், குடியிருப்பு காணிகள் மற்றும் அரச காணிகளில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE